அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைச் சொற்களுக்கான குழு -ஆயுஷ்
May 20 , 2018 2380 days 778 0
அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பயன்பாட்டு நோக்கத்திற்காக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) முன்மொழிவினைத் தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைச் சொற்களுக்கான குழுவானது (Commission for Scientific and Technical Terminology-CSTT) ஆயுஷ் (AYUSH’) எனும் வார்த்தையை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் ஏற்றுக் கொண்டுள்ளது.
“ஹோமியோபதி, சோவா ரிக்பா, சித்தா, யுனானி, நேச்சுரோபதி, யோகா, ஆயுர்வேதா ஆகியவற்றை உள்ளடக்கிய குணப்படுத்துதல் மற்றும் உடல் நலத்திற்கான பாரம்பரிய மற்றும் பயன்பாட்டு வழக்கமல்லாத மருத்துவ முறை” எனும் பொருளோடு (Traditional and Non-Conventional Systems of Health Care and Healing which include Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha, Sowa Rigpa, Homoeopathy etc”) ஆயுஷ் எனும் வார்த்தையை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைச் சொற்களுக்கான குழு அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் இந்த வார்த்தையானது அதிகாரப்பூர்வ முறையில் அனைத்து அரசு தொடர்புகளிலும் பயன்படுத்தப்படும். அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைச் சொற்களுக்கான குழுவானது 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இந்தி மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும், அறிவியல் பூர்வ மற்றும் தொழில் நுட்ப சொற்களை வரையறுத்தலை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 344(4) -னுடைய கூறின் கீழ் இந்திய அரசின் தீர்மானத்தின் மூலம் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைச் சொற்களுக்கான குழு உருவாக்கப்பட்டது.