TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதி

December 15 , 2018 2045 days 662 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதிக்காக 50 கோடி ரூபாயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்க குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • UGC (University Grants Commission) மற்றும் AICTE (All India Council for Technical Education) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ 50 லட்சம் வரை உதவியாக வழங்கப்படும்.
  • இந்த உதவியானது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
  • இது அறிவுத்திறன் அடிப்படையிலான சூழலியலில் யுக்தி சார்ந்த துறைகளில் படைப்புத் திறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு மறைந்துள்ள திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முன்னதாக மாநில அரசானது உயிரி அறிவியல் கொள்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கைகளில் இதே போன்ற உதவிகளை அறிவித்துள்ளது.
  • குஜராத் அரசின் S & T துறையானது, குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தினை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்