TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர்

August 9 , 2022 714 days 505 0
  • மூத்த மின்வேதியியல் அறிவியலாளரான நல்லதம்பி கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
  • இது நாடு முழுவதும் உள்ள, அரசினால் நடத்தப்படுகின்ற 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.
  • இவர் இரண்டு ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் இருப்பார்.
  • லித்தியம் அயனி மின்கலங்கள் துறையில் அவரது பங்களிப்பிற்காக இவர் பிரபலமாக அறியப் பட்டார்.
  • கலைச்செல்வி தற்போது தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CSIR-CECRI) தலைமை தாங்கிய முதல் பெண் அறிவியலாளர் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்