அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
November 18 , 2017 2591 days 794 0
வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் போன்ற துறைகளில் பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்காக, இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA – Indian National Science Academy) மற்றும் பெலாரஸ் தேசிய அறிவியல் அகாடமிக்கு (NASB – National Academy of Science of Belarus) இடையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளுடைய உலகளாவிய போட்டிக்குரிய தொழிற்நுட்பங்களை அடையாளப்படுத்துவதையும், மதிப்பிடுவதையும், அவற்றை மேம்படுத்தி வணிக மயமாக்குவதையும் நோக்கங்களாகக் கொண்டது.
இரு நாடுகளின் நிறுவனங்களும் ஆராய்ச்சி, தொழிற்நுட்ப பரிமாற்றம், இரு நாட்டு நிபுணர்கள் பரிமாற்ற பயணங்கள் மற்றும் கூட்டு பயிலரங்கங்கள் போன்றவற்றின் மூலம் அறிவியல் மற்றும் பொருளாதாரப் பயன்களைப் பெற்றிட இந்த ஒப்பந்தம் உதவும்.