2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசானது பின்வருபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் பி குட்னொஃப்.
பிங்காம்டனில் உள்ள நியூயார்க் மாகாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம் ஸ்டான்லி விட்டிங்ஹாம்.
ஜப்பானில் உள்ள மீஜோ பல்கலைக் கழகம் மற்றும் ஆசாஹி கேசி கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அகிரா யோஷினோ.
லித்தியம் அயனி மின்கலனின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. லித்தியம் அயனி மின்கலனானது "கம்பியற்ற, புதைபடிவ எரிபொருள் இல்லாத சமூகத்திற்கான” அடித்தளத்தை அமைத்துள்ளது.
1970களில் ஏற்பட்ட எண்ணெய் குறித்த பிரச்சினையின் போது லித்தியம் அயனி மின்கலனின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
எம் ஸ்டான்லி வைட்டிங்ஹாம் என்பவர் டைட்டானியம் டி சல்பைடு எனப்படும் ஆற்றல் நிறைந்த ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். அவர் இதை ஒரு கேத்தோடு தயாரிக்கப் பயன்படுத்தினார்.
இது லித்தியம் மின்கலனில் உள்ள நேர்மின் முனையாகும்.
யோஷினோவின் உள்ளமைவின் அடிப்படையில் சோனி நிறுவனமானது 1991 ஆம் ஆண்டில் முதலாவது வணிக லித்தியம் அயனி மின்கலங்களை வெளியிட்டது.
97 வயதில், பேராசிரியர் ஜான் பி குட்னொஃப் நோபல் பரிசு பெற்ற மிகப் பழமையான மனிதர் ஆவார்.