TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் புதுமை மேலாண்மைக்கான 2023 ஆம் ஆண்டு ஃபாலிங் வால்ஸ் பரிசு

December 21 , 2023 193 days 183 0
  • அப்தௌளயே டையாபேட் அவர்களின் ஆராய்ச்சிப் பணிக்காக அறிவியல் மற்றும் புதுமை மேலாண்மைக்கான 2023 ஆம் ஆண்டு ஃபாலிங் வால்ஸ் பரிசு வழங்கப்பட்டது.
  • மலேரியாவை உண்டாக்கும் பெண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றுவதன் மூலம் அவற்றை அழிக்கக் கூடிய ஒரு புதுமையான நுட்பத்தை அவர் உருவாக்கினார்.
  • மலேரியா பொதுவாக பெண் அனாபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.
  • மரபணு இயக்கிகள் என்ற ஒரு தொழில்நுட்பத்தின் கீழ், மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களைச் சுற்றுச்சூழலில் விடுவதன் மூலம், பெண் கொசுக்கள் புதிய பெண் சந்ததிகளை உற்பத்தி செய்வதைத் தடுக்கின்றன.
  • இது பெண் கொசுக்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதன் மூலம் கண்டம் முழுவதும் மலேரியா ஏற்படுவதற்கான காரணங்கள் குறையும்.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட 619,000 உயிரிழப்புகளில் சுமார் 96 சதவிகிதப் பங்குடன், உலகின் மிகப்பெரிய மலேரியா பாதிப்பினை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, அந்த 96 சதவீதத்தில், 80 சதவீத இறப்புகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்