TNPSC Thervupettagam

அறிவியல் மற்றும் பொறியியல் அகாடமி விருது

February 19 , 2018 2472 days 787 0
  • இந்தியாவைச் சார்ந்த பதிகணினியல் பொறியாளர் விகாஸ் சத்யேவிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஆஸ்கார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் 2018 விழாவின் பொழுது இவ்விருது வழங்கப்பட்டது.
  • இந்த அறிவியல் மற்றும் பொறியியல் அகாடமி விருதானது திரைப்பட தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
  • சத்யேவின் குழுவானது “ஷாட் ஓவர் K1 காமிரா“ அமைப்பு எனும் படக்கருவியினை கருத்துருவாக்கம் செய்து, வடிவமைத்து அதனை செயல்படுத்தியதற்காக இந்த விருது அக்குழுவிற்கு வழங்கப்பட்டது.
  • ஷாட் ஓவர் K1 படக்கருவி அமைப்பானது மேற்பரப்பிலிருந்து உயரமான இடத்தில் உபயோகிக்கப்படும் படக்கருவி அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தும் வகையில் படக்கருவி மற்றும் ஒளி வில்லை அமைப்பை உடையது ஆகும்.
  • இந்த படக்கருவி அமைப்பின் முக்கிய பணியானது ஹெலிகாப்டரின் அதிர்வுகள் படக்கருவியின் நிலையை அதிரச் செய்யாது நிலையான காட்சிகளைப் பதிவு செய்ய உதவுவது ஆகும்.
  • இந்த படக்கருவி அமைப்பினை வடிவமைத்த குழுவினர்,
  1. விகாஸ் சத்யே
  2. ஜான் காயல்
  3. பிராட் ஹர்ன்மடெல்
  4. ஷான் பக்கிங்ஹாம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்