TNPSC Thervupettagam

அறிவியல்பூர்வ ஆய்விற்கான ஆழ்துளையிடல் திட்டம்

July 22 , 2024 10 hrs 0 min 19 0
  • இந்தியாவின் ஒரேயொரு அறிவியல்பூர்வ ரீதியிலான ஆய்விற்கான ஆழ்துளையிடல் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஒரு பணியானது மகாராஷ்டிராவின் காரத் என்னுமிடத்தில் உள்ள ஆழ்துளைப் புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திடம் (BGRL)  வழங்கப் பட்டுள்ளது.
  • பூமியின் கண்ட மேலடுக்கினை சுமார் 6 கி.மீ ஆழத்திற்கு துளையிட்டு அறிவியல்பூர்வ ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
  • மகாராஷ்டிராவின் கொய்னா-வார்னா பகுதியில் செயலில் உள்ள நிலப்பிளவு மண்டலத்தில் நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த இது உதவும்.
  • 1962 ஆம் ஆண்டில் சிவாஜி சாகர் ஏரி அல்லது கொய்னா அணை உருவாக்கப் பட்டதில் இருந்து இப்பகுதி அடிக்கடி மற்றும் அவ்வப்போது நிலநடுக்கங்களை எதிர் கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்