இந்தியாவின் ஒரேயொரு அறிவியல்பூர்வ ரீதியிலான ஆய்விற்கான ஆழ்துளையிடல் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஒரு பணியானது மகாராஷ்டிராவின் காரத் என்னுமிடத்தில் உள்ள ஆழ்துளைப் புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திடம் (BGRL) வழங்கப் பட்டுள்ளது.
பூமியின் கண்ட மேலடுக்கினை சுமார் 6 கி.மீ ஆழத்திற்கு துளையிட்டு அறிவியல்பூர்வ ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
மகாராஷ்டிராவின் கொய்னா-வார்னா பகுதியில் செயலில் உள்ள நிலப்பிளவு மண்டலத்தில் நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த இது உதவும்.
1962 ஆம் ஆண்டில் சிவாஜி சாகர் ஏரி அல்லது கொய்னா அணை உருவாக்கப் பட்டதில் இருந்து இப்பகுதி அடிக்கடி மற்றும் அவ்வப்போது நிலநடுக்கங்களை எதிர் கொண்டு வருகிறது.