TNPSC Thervupettagam

அறிவுசார் சொத்துரிமை (IP – Intellecual Property) பற்றிய முதல் இந்திய அமெரிக்கப் பேச்சு வார்த்தை

November 2 , 2018 2087 days 703 0
  • அறிவுசார் சொத்துரிமைக் கொள்கைகளில் இருதரப்பு மூலோபாய ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்காக முதலாவது இந்திய-அமெரிக்கப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் தொடங்கப்பட்டது.
  • இந்த பேச்சுவார்த்தையானது அறிவுசார் சொத்துமை களத்தில் இரண்டு நாடுகளுக்குமிடையே தீர்வுகளை அடையாளம் காண்பதையும், தொழில்நுட்ப அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்நிகழ்ச்சியானது
    • அமெரிக்க வர்த்தக மன்றத்தின் (American Chmber of Commerce) உலகளாவிய புத்தாக்க கொள்கை மையம்
    • தொழில்துறை அமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (FICCI - Federation of Indian Chambers of Commerce & Industry) மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
  • இது வாஷிங்டன் டிசி மற்றும் புது டெல்லியில் மாறிமாறி ஆண்டுதோறும் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்