தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு நடைமுறைக்கு உட்படுத்தக் கூடிய வகையிலான மீக்கடத்தியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
LK-99 எனப் பெயரிடப்பட்ட இந்த மீக்கடத்தி, லெட் அபாடைட் எனப்படும் ஒப்பீட்டளவில் பொதுவான கனிமத்தில் குறைந்த எண்ணிக்கையிலான சில செப்பு மூலக்கூறுகளை உள்ளிடுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
மீக்கடத்திகள் எந்தவொருத் தடையுமின்றி மின்னோட்டத்தைப் பாய்வதற்கு வழிவகை செய்யும் பொருட்கள் ஆகும்.
தற்போதுள்ள மீக்கடத்திச் சாதனங்கள், மிகக் குறைந்த வெப்பநிலையில் மட்டுமே அவற்றின் மீக்கடத்திப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
இது பெரும்பாலான இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவதை சாத்தியமற்றதாக ஆக்குகிறது.