TNPSC Thervupettagam

அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி – பதவி நீக்கம்

February 4 , 2018 2358 days 706 0
  • உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவானது (In-house Panel) அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி நாராயணன் சுக்லா மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்து, எதிர்மறை அறிக்கை ஒன்றை அளித்துள்ளதன் அடிப்படையில் நாராயணன் சுக்லாவை பதவி நீக்கம் (Impeachment) செய்யவதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை வழங்கியுள்ளார்.
  • மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட ஓர் லக்னோ தனியார் மருத்துவ கல்லூரிக்கு சேர்க்கைக்கான அனுமதி வழங்கிய வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 1968-ன் நீதிபதிகள் விசாரணைச் சட்டமானது (Judges Enquiry Act, 1968) நீதிபதிகளின் பதவி நீக்கம் தொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகின்றது.
  • நிரூபிக்கப்பட்ட நடத்தைக் கேடு, நிரூபிக்கப்பட்ட திறமையின்மை (Proved misbehaviour and incapacity) ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
  • உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்றங்களுடைய நீதிபதிகளின் பதவி நீக்கம் தொடர்பான பாராளுமன்றத்தின் விரிவான பதவி நீக்க நடைமுறைகளின் மேற்கொள்ளலுக்குப் பிறகே குடியரசுத் தலைவரால் பதவி நீக்க ஆணையை வழங்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்