பெருகிவரும் மனித இடையூறுகளால் ஏற்படும் அழுத்தங்களிலிருந்து கங்கை நதியின் செறிந்த நீர்வாழ் உயிரினப் பல்வகைத் தன்மையை பாதுகாக்க நமாமி கங்கா திட்டத்தின் கீழ் அலகாபாத்தில் ஆமைகள் சரணாலயமும், மூன்று நதிகளின் சங்கம இடத்தில் நதிப் பல்லுயிர் பூங்காவையும் அமைக்க நீர்வளத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மூன்று நதிகள் (கங்கை, யமுனை, புராண சரஸ்வதி) சங்கமிக்கும் இடமான சங்கம் எனும் இடத்தில் பல்லுயிர் பூங்கா அமைத்தலுக்கும், திரிவேணியில் ஆமை பெருக்க மையமும் (நிரந்தர ஆமை குஞ்சு பண்ணை) அமைத்தலுக்கும், கங்கையின் முக்கியத்துவம் மற்றும் அதை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.