கோய் கார்ப் என்ற ஒரு அலங்கார மீன் வகையைப் பாதிக்கும் வைரஸ் ஆனது, இந்தியாவில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் அலங்கார மீன் வர்த்தகத்தின் மையமான சென்னை கொளத்தூரின் பல்வேறு இடங்களில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இது கடுமையான இறப்பு விகிதம் மற்றும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது,
கோய் ஹெர்பெஸ் வைரஸ் (KHV) அல்லது சைப்ரினிட் ஹெர்பெஸ் வைரஸ்-3 (CyHV-3) என்பது முதன்முதலாக 1998 ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பதிவாகியது.
சைப்ரினஷ் கார்பியோ கோய், பொதுவாக "கோய் அல்லது கோய் கார்ப்" என்று அழைக்கப் படுகிறது.
இது அதன் வண்ணங்கள், வடிவம் மற்றும் செதில் வடிவமைப்பு காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்படும் ஓர் அலங்கார மீன் வகை ஆகும்.