பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா உட்பட 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராளுமன்றச் செயல்பாட்டு நிரலைத் தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவினையும் (PAC) அமைத்தார்.
இந்தக் குழுவானது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவையின் நேரத்தை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தி, விவாத நடைமுறைகளைக் கையாளுகிறது.
இது மொத்தம் 26 உறுப்பினர்களைக் கொண்டது என்பதோடு அதில் 15 உறுப்பினர்கள் மக்களவையினையும், மீதமுள்ள 11 உறுப்பினர்கள் "மாநிலங்களவையினையும்" சேர்ந்தவர்கள்.