TNPSC Thervupettagam

அலுவல் மொழித்துறையின் முதல் சீராய்வுக் கூட்டம்

September 4 , 2018 2279 days 662 0
  • அலுவல் மொழித்துறையின் முதல் சீராய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார்.
  • இந்தக் கூட்டமானது, அலுவல் பணியில் ஹிந்தி மொழியை செயல்படுத்துவது தொடர்பான செயல்பாட்டையும் சிக்கல்களையும் பற்றி விவாதிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
  • மேலும், இந்தத் துறையானது, மொழிபெயர்ப்பு வேலையை எளிதாக்கவும் விரைவாக்கவும், அனைத்து வகையான அலுவல் கோப்புகளை ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பதற்காக “கந்தஸ்த்” என்றழைக்கப்படும் கணிணி மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • மேலும், ஆங்கிலம் உட்பட 16 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் “பிரவாஹ்” என்ற மின்னணு கற்றல் தளத்தை இத்துறையானது உருவாக்கியுள்ளது.
  • இத்தளமானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹிந்தி திவாஸ் அன்று தொடங்கப்பட உள்ளது.
  • இந்த மின்னணு கற்றல் தளத்தின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் அவரவர் தாய்மொழியின் வாயிலாக ஹிந்தியை கற்றுக்கொள்ள முடியும்.
  • முன்னதாக, 2017 ஹிந்தி திவாஸ் அன்று, எளிதில் ஹிந்தியை கற்றுக்கொள்ளுவதற்காக ‘லீலா’ என்ற கைப்பேசி செயலி ஒன்று தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்