- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு
- சார்டர்ட் அக்கவுண்டன்ட் சுவாமிநாதன் குருமூர்த்தி
- வியாபார வல்லுநர் சதீஷ் காசிநாத் மராத்தே
ஆகியோரை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்தின் அலுவல் சாரா இயக்குநர்கள் நியமனத்திற்கு ஒப்புதலளித்துள்ளது.
- அவர்கள் நான்கு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய இயக்குநர்கள் குழுமத்தின் உள்ளடக்கம்
- இது RBI இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை (அதிகபட்சமாக நான்கு) கொண்டது.
- 4 அலுவல் சாரா இயக்குநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவல்சாரா இயக்குநரும் இந்தியாவின் நான்கு பிராந்தியங்களை குறிப்பிடும் வகையில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ளூர் மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
- RBI மட்டும் 10 அலுவல் சாரா இயக்குநர்களை நியமிக்கின்றது. (இந்திய பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட பகுதிகளில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்களை)
- இவர்கள் தவிர ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் படி மத்திய அரசின் பிரதிநிதி ஒருவரும், (வழக்கமாக நிதிச் சேவைகள் செயலாளர்) நியமிக்கப்படுகின்றார்.