அல்-கொய்தா அமைப்பின் தலைவர் படுகொலை
August 5 , 2022
718 days
355
- ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஒரு ஆளில்லா விமானம் மூலமான தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது.
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மத்திய உளவு அமைப்பு நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.
- இவர் மற்றும் ஒசாமா பின்லேடன் ஆகியோர் சேர்ந்து 9/11 தாக்குதலுக்குத் திட்டம் இட்டவர் ஆவர்.
- மேலும் அவர் அமெரிக்காவினால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/550.jpg)
Post Views:
355