TNPSC Thervupettagam

அல்-ஹக்கீம் மசூதி - எகிப்து

June 30 , 2023 385 days 304 0
  • எகிப்தின் கெய்ரோ எனுமிடத்தில் உள்ள 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அல்-ஹக்கீம் மசூதியை இந்தியப் பிரதமர் அவர்கள் பார்வையிட்டார்.
  • இது இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப் பட்டது.
  • 1012 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட மசூதியின் சுவர்கள் மற்றும் கதவுகளில் நன்கு நுணுக்கமான முறையில் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன.
  • போஹ்ரா சமூகத்தினர் எகிப்து நாட்டில் தோன்றி அதற்குப் பின்னர் ஏமனுக்கு இடம் பெயர்ந்ததாக அறியப் படுகிறது.
  • அச்சமூகத்தினர் 11 ஆம் நூற்றாண்டில் இந்தியாவினுள் குடியேறி வாழத் தொடங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்