எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் அல்கா மிட்டலுக்கு, அந்தக் கழகத்தின் புதிய இடைக்கால தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எனும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மகாரத்னா நிறுவனத்தின் உயரிய பதவியை வகிக்கும் முதல் பெண் இவர் ஆவார்.
சுபாஷ் குமாரை என்பவரையடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்கிறார்.