TNPSC Thervupettagam

அல்கேன்கள் - கைரல் ப்ரான்ஸ்டெட் அமிலங்கள்

October 31 , 2024 22 days 60 0
  • மிக நன்கு வரையறுக்கப்பட்ட கைரல் ப்ரான்ஸ்டெட் அமிலங்களைப் பயன்படுத்தி அல்கேன்களைச் செயல்படுத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது வேதிவினைகளின் செயல்திறனையும் தேர்ந்தெடுக்கும் திறனையும் கணிசமாக மேம்படுத்துகிறது.
  • அல்கேன்கள் ஆனது முற்றிலும் ஒற்றை இணைவு கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்ற மற்றும் வேறு எந்தச் செயல்பாட்டுக் குழுவையும் கொண்டிருக்காத கரிம சேர்மங்கள் ஆகும்.
  • அவை உயிரியல் ரீதியாக ஒப்பீட்டளவில் செயலற்றவை என்பதோடு மேலும் அவை பெரும்பாலும் உயிரினங்களின் வேதியியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
  • அல்கேன்கள், பொருத்தமானச் சூழ்நிலையில் ஆக்சிஜன், ஹாலஜன்கள் மற்றும் வேறு சில கூறுகளுடன் வினை புரிகின்றன.
  • அல்கேன் எரிபொருளாகப் பயன்படுத்தப் படும் போது எந்திரம் அல்லது உலைகளில் எரிதல் செயல்முறையின் போது ஆக்ஸிஜனுடனான வினை ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்