TNPSC Thervupettagam
May 21 , 2019 1888 days 723 0
  • அல்டிமா துலே என்ற விண்பொருளின் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர், மெத்தனால் மற்றும் கரிம மூலக்கூறுகள் ஆகிய தனித்துவம் வாய்ந்த கலவை இருப்பதற்கான ஆதாரத்தை நாசா கண்டறிந்துள்ளது.
  • தற்பொழுது வரை விண்கலத்தினால் ஆய்வு செய்யப்பட்ட பனிப் பொருட்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இந்தக் கலவை உள்ளது.
  • அல்டிமா துலே என்பது தொலைதூரத்தில் உள்ள ஒரு அறியப்படாத உலகம் என்பதைக் குறிக்கும் ஒரு கிரேக்க - இலத்தீன் சொற்கூறாகும்.
  • இதன் அறிவியல் பெயர் 2014MU69 என்பதாகும்.
  • இது தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நியூ ஹாரிசன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹபிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி மார்க் பூய் என்பவரால் 2014 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது நெப்டியூனுக்கு அப்பால் குயுப்பர் பட்டையில் (Kuiper belt) அமைந்துள்ள ஒரு விண்பொருளாகும்.
  • நியூ ஹாரிசன் திட்டமானது குயுப்பர் பட்டையில் உள்ள பொருட்களைக் கண்டறிவதற்காக 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கைப்பர் பட்டை
  • கைப்பர் பட்டை என்பது சூரிய மண்டலத்திற்கு வெளிப் புறத்தில் உள்ள தட்டு போன்ற ஒரு அமைப்பாகும்.
  • இது பூமியிலிருந்து தோராயமாக 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகத் தொலைவில் உள்ள ஒரு உலகமாகும்.
  • குயுப்பர் பட்டையானது அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் மூன்று குறுங்கோள்களுக்குத் தாயகமாக விளங்குகின்றது.
    • புளூட்டோ
    • ஹவ்மியா
    • மேக்மேக்
  • புளூட்டோ முதலில் ஒரு கோளாகக் கருதப்பட்டது. ஆனால் குயுப்பர் பட்டையின் ஒரு பகுதியாக புளூட்டோவானது 2006 ஆம் ஆண்டில் ஒரு குறுங்கோளாக மீண்டும் வகைப்படுத்தப்பட்டது.
  • குயுப்பர் பட்டையினுள் இருக்கும் பொருட்கள் நெப்டியூனிற்கு அப்பால் உள்ள பொருட்களாகக் கருதப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்