TNPSC Thervupettagam
June 4 , 2020 1638 days 635 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அல்ட்ரா ஸ்வச் அல்லது அதீத சுத்தம் என்ற ஒரு கிருமிநாசினிப் பிரிவை உருவாக்கியுள்ளது.
  • இதில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மின்னணுப் பொருட்கள், துணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கும்.
  • அல்ட்ரா ஸ்வாச் பிரிவானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் வகையில் ஒரு வினையூக்கி மாற்றியைக் கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பு ஓசோன் ஏற்றவெளித்  தொழில்நுட்பம் (Ozonated Space Technology) எனப்படும் ஒரு மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைப்  பயன்படுத்துகிறது.
  • இந்தச் சாதனம் ஓசோனைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையை உள்ளடக்கிய ஓசோன் மெழுகுத் தொழில்நுட்பத்தையும் (Ozone Sealant Technology) பயன்படுத்தி வருகிறது.
  • ஓசோன் ஏற்றம் என்பது ஒரு வகை மேம்பட்ட ஆக்ஸிஜனேற்றச் செயல்முறையாகும். இது பரவலான கரிமச் சேர்மங்கள் மற்றும் அனைத்து நுண்ணுயிரிகளையும் தாக்கக் கூடிய வகையில் இருக்கும் அதிகம் எதிர்வினை புரியும் ஆக்ஸிஜன் இனங்களின் உற்பத்தியை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்