TNPSC Thervupettagam

அல்லூரி சீதாராம ராஜு சிலை

July 9 , 2022 871 days 523 0
  • புகழ்பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரம் பகுதியில் அமைந்துள்ள 30 அடி உயரம் கொண்ட ஒரு  வெண்கலச் சிலையாகும்.
  • புகழ்பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பழங்குடியினச் சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கச் செய்வதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் நடத்தியப் போராட்டத்திற்காக நினைவு கூப்படுகிறார்.
  • அல்லூரி சீதாராம ராஜு 1922 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக ரம்பா கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தினார்.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமேந்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டதால் உள்ளூர் மக்களால் அவர் ‘மான்யம் வீருடு’ (காடுகளின் நாயகன்) என்றும் அழைக்கப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்