TNPSC Thervupettagam

அழிந்து போன டைர் ஓநாய் மீண்டும் உயிர்ப்பிப்பு

April 12 , 2025 7 days 63 0
  • அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் அறிவியல் நிறுவனமானது அழிந்து போன ஒரு விலங்கு இனமான டைர் ஓநாயினை மீண்டும் உருவாக்கியுள்ளது.
  • டைர் ஓநாய்கள் (அனோசியான் டைரஸ்), சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போவதற்கு முன்னதாக தெற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் அதிகளவில் காணப் பட்ட பெரிய வேட்டை நாய்கள் ஆகும்.
  • அவை இன்றையச் சாம்பல் நிற ஓநாய்களை (கேனிஸ் லூபஸ்) ஒத்திருந்தன ஆனால் இவை சாம்பல் நிற ஓநாய்களை விட மிகவும் பெரியதாக, வெள்ளை நிறத் தோலுடன் கூடியவையாக இருந்தன.
  • டைர் ஓநாய் இனத்தின் மாதிரிகள் ஆனது, சுமார் 13,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் பல்லிலிருந்தும், 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்தும் பெறப்பட்டது.
  • ஆனால் புதிய குட்டிகள் தற்போது அழிந்து போன அந்த டைர் ஓநாய்களை (100%) முழுவதுமாக ஒத்திருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்