TNPSC Thervupettagam

அழிந்து போன புலி இனங்கள் மீண்டும் உருவாக்கம்

August 22 , 2022 699 days 383 0
  • தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி இனத்தினை மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உயிர்ப்பிப்பதற்காக 15 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர்.
  • இது 1930 ஆம் ஆண்டுகளில் அழிந்து போன வயிற்றில் பையுடைய ஒரு பாலூட்டி இனமாகும்.
  • டாஸ்மேனியா பகுதியில் அழிந்து போன சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டு எடுப்பதற்காக இந்த விலங்குகளை அதன் சொந்த இடமான டாஸ்மேனியா பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்துவதை இந்த இலட்சிய நோக்கமுள்ளத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தைலாசின் இனங்களை உயிர்ப்பிப்பதற்கான முதல் முயற்சி அல்ல.
  • 1999 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அறிவியலாளர் டாக்டர் மைக்கேல் ஆர்ச்சர், இது குறித்து ஒரு முற்றுப் பெறாத ஆராய்ச்சியினை மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்