TNPSC Thervupettagam

அழிவின் விளிம்பில் உள்ள உலகின் மிகப்பெரிய மலர் வகை

September 24 , 2023 300 days 234 0
  • உலகின் மிகப் பெரிய பூக்களில் சிலவற்றை உள்ளடக்கிய ராஃப்லேசியா என்ற மலர் இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.
  • இதுவரையில் அறியப்பட்ட 42 ராஃப்லேசியா இனங்களில் 60% இனங்கள் மோசமான அழிவு நிலையை எதிர்கொள்கின்றன.
  • ராஃப்லேசியா என்பது தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒட்டுண்ணி வகை பூக்கும் தாவரங்களின் இனமாகும்.
  • ராஃப்லேசியா மலர் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது.
  • இந்தத் தாவரங்கள் அளவு மற்றும் எடையின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய ஒற்றை மலர்களை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்றவையாகும்.
  • அவற்றின் துர்நாற்றம் காரணமாக அவை பெரும்பாலும் "பிணப் பூக்கள்" என்று குறிப்பிடப் படுகின்றன.
  • அளவில் மிகப் பெரிய இந்த மலர்கள், 3 அடி (கிட்டத்தட்ட 1 மீட்டர்) விட்டம் கொண்டவை மற்றும் 7 கிலோ வரை எடை கொண்டவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்