இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் ஆனது, சமீபத்தில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு வசதியை (CNAP) அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
இந்த அம்சம் ஆனது, பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க வழி வகை செய்து, தேவையற்ற மற்றும் அடையாளம் அறியப்படாத (ஸ்பேம்) தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க உதவும்.
ட்ரூகாலர் என்ற செயலியினைப் போன்ற ஒரு சேவையான CNAP என்பது தொலைபேசி அழைப்பாளரின் பெயரைத் திரையிடும்.
TRAI அமைப்பின் படி, சேவை வழங்குநர்கள் CNAP வசதியில் உள்ளிடுவதற்கு, தங்களது வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் (CAF) தொலைபேசிச் சந்தாதாரர்களால் வழங்கப் பட்ட பெயர் அடையாளத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அனைத்து சேவை வழங்குநர்களும், தங்கள் சந்தாதாரர்களுக்கு அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த வசதியை வழங்க வேண்டும்.
SIM அட்டை வாங்கும் போது நாம் பயன்படுத்தும் பெயர் நாம் அழைக்கும் நபருக்குத் திரையில் தெரியும்.