TNPSC Thervupettagam

அவசரகால பொருளாதார நடவடிக்கைகள் - நிதி அமைச்சர்

August 25 , 2019 1922 days 656 0
  • பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதைக் (மந்தமான பொருளாதாரம்) கருத்தில் கொண்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

முக்கியமான நடவடிக்கைகள்

  • பொதுத் துறை வங்கிகளில் ரூ.7000 கோடியிலான நிதியை உட்செலுத்துதல்.
  • அரசுத் துறைகளால் புதிய வாகனங்கள் வாங்கப்படுவது மீதான தடை இரத்து செய்யப்படுதல்.
  • அக்டோபர் 01 ஆம் தேதியிலிருந்து வருமான வரித் துறை அழைப்பாணைகள் ஒரு தனித்துவ அடையாளக் குறியீட்டுடன் மையப்படுத்தப்பட்ட கணினியால் மட்டுமே உருவாக்கப்படவேண்டும்.
    • ஒரு தனித்துவக் குறியீடு இல்லாமல் மற்றும் வரித் துறை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட எந்தவொரு அழைப்பாணையும் செல்லாததாகக் கருதப்படுகின்றது.
  • வீட்டுவசதி நிதியியல் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி நிதி அளிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்