TNPSC Thervupettagam

அவசரநிலை பிரகடனம் - பபுவா நியூ கினியா

June 21 , 2018 2253 days 713 0
  • தொடர்ந்து பல்வேறு நாட்களாக நீடிக்கும் கலவரத்திற்கு எதிரான   பதிலெதிர்ப்பாக நாட்டின் கரடுமுரடான (rugged)  தெற்கு உயர்நில மாகாணத்தில் 9 மாத அவசரகால  நிலையை பபுவா நியூகினியா (Papua New Guinea) நாட்டின்  பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
  • 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தை (Asia-Pacific Economic Cooperation- APEC) நடத்த உள்ள மிகச்சிறிய ஆனால் வளங்கள் செறிந்த பசுபிக் பெருங்கடல் நாடான பபுவா நியுகினியாவில் வன்முறை மற்றும் சட்டத்திற்கு புறம்பான நிலையில் நீண்ட காலமாக போராட்டம் நடந்து வருகின்றது.
  • வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு நடுவிலும் பிராந்திய ஆளுநராக வில்லியம் போவியினுயை (William Powi) தேர்ந்தேடுப்பினை  நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதன் காரணமாக இக்கலவரம் நடைபெற்று வருகின்றது.
  • முன்னாள் காவல் அதிகாரி மற்றும் இம்மாகாணத்தின் பொறுப்பு நிர்வாகியான தாமஸ் எலுஹ்-விற்கு அரசியலமைப்பு சட்ட அவசரகால அதிகாரங்கள் (Constitutional emergency powers) வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்