சர்வதேச போக்குவரத்து மற்றும் கடப்பு வழிப்பாதையை உருவாக்குதல் மீதான ஒப்பந்தத்தில் (Agreement on Establishment of an International Transport and Transit Corridor) இந்தியா இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அஸ்காபாத் ஒப்பந்தம் (Ashgabat Agreement) என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் இணைவு 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும்.
அஸ்காபாத் ஒப்பந்தம்
மத்திய ஆசிய நாடுகளுக்கும், ஈரானிய ஓமானிய துறைமுகங்களுக்கும் இடையே மிக அருகாமையில் அமைந்த வர்த்தகப் பாதையை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
2011ஆம் ஆண்டு ஓமன், ஈரான், டர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இவையே இந்த ஒப்பந்தத்தின் நிறுவன நாடுகளாகும். (Founding members).
பின்னர் கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன.
ஈரான்-டர்க்மெனிஸ்தான்-கஜகஸ்தானிற்கு இடையேயான இரயில்வேப் பாதையானது அஸ்காபாத் ஒப்பந்தத்தின் முக்கியமான பாதையாகும்.
மேலும் இது இந்தியா நிதியளித்து வரும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து வழிப்பாதையின் (International North-South Transport Corridor – INSTC) ஒரு பகுதியாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
அஸ்காபாத் நகரானது டர்மெனிஸ்தான் நாட்டின் தலைநகராகும்.
இது கராகும் (Karkum) பாலைவனத்திற்கும், கோபெட் டேக் (Kopet Dag) மலைத் தொடருக்கும் நடுவே அமைந்துள்ளது.