அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணையின் சோதனையை இந்தியா விரைவில் தொடங்க உள்ளது.
இந்த ஏவுகணை 160 கி.மீ தூரத்திலிருந்து எதிரி விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டது.
அஸ்ட்ரா மார்க் ஆனது காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்ட, விண்ணிலிருந்து விண்ணில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஒரு ஏவுகணையாகும் (BVRAAM - Beyond visual range missile air-to-air missile).
இது மாக் 4.5 என்ற வேகத்தில் ஒலி வேகத்தை விட 4 மடங்கு அதிவேகமாகப் பறக்கும்.