வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை அதிவேக அலைவரிசையுடன் கூடிய (High-Speed Bandwidth) தொலைத் தொடர்பு வசதியினால் இணைக்கும் அஸ்தமங்கல் திட்டத்தை BSNL தொடங்கியுள்ளது.
1900 கைபேசி கோபுரங்கள் திமா ஹசாவோ மற்றும் கார்பி அங்லாங் ஆகிய மலைப் பிரதேச மாவட்டங்களில் அமைக்கப்படும்.
அஸ்ஸாமில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் சிறந்த இணைப்பை (Better Connections) ஏற்படுத்தித் தருவதற்கு பொதுத்துறை தொலைத் தொடர்பு இயக்குநரான (Public sector telecom operator) BSNL முக்கியத்துவம் அளித்துள்ளது.
அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் ஒளியிழை இணையதள இணைப்பு (optical fibre network) மூலம் இணைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..