ஒடிசா கடற்கரையில் தேஜாஸ் AF MK 1 எனப்படும் இலகுரகப் போர் விமானத்திலிருந்து அஸ்த்ரா எனப்படும் புலனாகும் வரம்பிற்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஒரு திறன் கொண்ட வான்வழி எறிகணையினை (BVRAAM) இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
இந்த எறிகணையானது பல்வேறு தொலைவு வரம்புகள் மற்றும் உயரங்களில் உள்ள இலக்குகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில மாற்று நிலை உந்துவிசை முறைகளைப் பயன்படுத்தி, குறுகிய தூர இலக்குகள் (20 கிலோ மீட்டர் வரை) மற்றும் நீண்ட தூர இலக்குகள் (100 கிலோ மீட்டர் வரை) ஆகிய இரண்டிற்கும் எதிராக இது ஈடுபடுத்தப்படலாம்.