குஜராத்தின் கட்ச் கடற்கரை மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் அஸ்னா புயல் உருவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நிலத்தில் தோன்றிய இந்த அரிய சூறாவளியான இது அரபிக்கடலை நோக்கிச் செல்கிறது.
இது 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அரபிக்கடலில் உருவான முதல் சூறாவளிப் புயலாகும்.
"அங்கீகரிக்கப்பட வேண்டியவர் அல்லது போற்றப்பட வேண்டியவர்" என்று பொருள் படும், அஸ்னா எனும் இப்பெயரானது பாகிஸ்தானால் வழங்கப்பட்டது.
1891 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ஆகஸ்ட் மாதம் (1976, 1964 மற்றும் 1944 ஆம் ஆண்டில்) மட்டும் அரபிக்கடலில் மூன்று சூறாவளி புயல்கள் மட்டுமே உருவாகின.