உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் சர்வதேசப் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அஸ்பார்டேம் எனப்படுகின்ற ஒரு செயற்கை இனிப்பூட்டியானது புற்றுநோயினை உண்டாக்கக் கூடும் என அறிவித்துள்ளன.
ஒரு செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேம் என்பது, பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் சர்க்கரைக்கான ஒரு மாற்றாகப் பயன்படுத்தப் படுகிறது.
இது சுக்ரோஸினை (சர்க்கரை) விட சுமார் 200 மடங்கு இனிப்புத் தன்மையுள்ள ஆனால் குறைந்த கலோரி கொண்ட ஒரு இனிப்பூட்டியாகும்.