TNPSC Thervupettagam

அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் – உயிர்க்கொல்லி பூஞ்சை

April 26 , 2024 213 days 254 0
  • உலகெங்கிலும் அசோல்-எதிர்ப்பு திறன் கொண்ட அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் (ARAf) பரவி வருவது ஒரு முக்கியமான பொது சுகாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளது.
  • அசோல்ஸ் என்பது அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்ற நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சைக்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளின் ஒரு முக்கிய வகையாகும்.
  • அசோல்-எதிர்ப்புத் திறன் கொண்ட பூஞ்சைத் தொற்று உள்ளவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 33% அதிகம் ஆகும்.
  • அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்பது மனிதர்களில் நோய்களை உண்டாக்கும் ஒரு பூஞ்சைத் தொற்று ஆகும்.
  • ஆஸ்பெர்கில்லோசிஸ் ஒவ்வோர் ஆண்டும் 300,000 க்கும் மேற்பட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
  • இது யூரோடியோமைசிடீஸ் வகுப்பினைச் சேர்ந்த பூஞ்சையாகும் என்பதோடு இது இயற்கையில் பரவலாக காணப்படுகிறது.
  • இது மண், மக்கும் தாவரங்கள், குளிர் பதன அமைப்புகள் மற்றும் வெப்பமூட்டு அமைப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்