உலகெங்கிலும் அசோல்-எதிர்ப்பு திறன் கொண்ட அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் (ARAf) பரவி வருவது ஒரு முக்கியமான பொது சுகாதார நெருக்கடியினை உருவாக்கியுள்ளது.
அசோல்ஸ் என்பது அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்ற நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சைக்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளின் ஒரு முக்கிய வகையாகும்.
அசோல்-எதிர்ப்புத் திறன் கொண்ட பூஞ்சைத் தொற்று உள்ளவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 33% அதிகம் ஆகும்.
அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ் என்பது மனிதர்களில் நோய்களை உண்டாக்கும் ஒரு பூஞ்சைத் தொற்று ஆகும்.
ஆஸ்பெர்கில்லோசிஸ் ஒவ்வோர் ஆண்டும் 300,000 க்கும் மேற்பட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இது யூரோடியோமைசிடீஸ் வகுப்பினைச் சேர்ந்த பூஞ்சையாகும் என்பதோடு இது இயற்கையில் பரவலாக காணப்படுகிறது.
இது மண், மக்கும் தாவரங்கள், குளிர் பதன அமைப்புகள் மற்றும் வெப்பமூட்டு அமைப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் காணப்படுகிறது.