இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மிமீ இயந்திர கைத் துப்பாக்கியை (பிஸ்டல்) இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
இதற்கு 'அஸ்மி' என்று பெயரிடப் பட்டுள்ளது.
இதன் பொருள் சுய மரியாதை, கடின உழைப்பு மற்றும் பெருமை என்பதாகும்.
புனேவில் உள்ள DRDO நிறுவனத்தின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மோவ் நகரில் உள்ள இராணுவக் காலாட்படை பயிற்சிப் பள்ளி ஆகியவை இணைந்து இந்தத் துப்பாக்கியை உருவாக்கி வடிவமைத்துள்ளன.