TNPSC Thervupettagam

அஸ்வினி ரேடார்

March 23 , 2025 11 days 56 0
  • பாதுகாப்புத் துறை  அமைச்சகமானது, காஜியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் இணைந்து LLTR எனப்படும் தாழ் மட்டத்திலான ரேடார் கருவியினை (அஸ்வினி) கொள்முதல் செய்வதற்காக ஒரு மூலதனக் கையகப்படுத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • LLTR (அஸ்வினி) என்பது அதிநவீன திட-நிலை தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயலில் உள்ள மின்னணு முறையில் ஊடுகதிர் ஆய்வு செய்யப்பட்ட நிலை சார் தொகுப்பு ரேடார் ஆகும்.
  • இந்த ரேடார் கருவியானது, அதிவேக போர் விமானங்கள் முதல் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற மித வேகத்தில் நகரும் இலக்குகள் வரையிலான வான்வழி இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
  • இதன் கொள்முதல் ஆனது, இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார் நிலை என்பதைக் கணிசமாக மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்