சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது ஒரு சிறியக் கிரகத்திற்கு இந்திய வானியலாளர் அஸ்வின் சேகரின் பெயரினை இட்டு அவரைக் கௌரவித்துள்ளது.
அஸ்வின் அவர்களின் பெயரிடப்பட்ட இந்தச் சிறிய கிரகமானது இனி (33928) அஸ்வின் சேகர் = 2000LJ27 என அறியப் படும்.
இவருக்கு முன்னதாக ஐந்து இந்தியர்களுக்கு மட்டுமே இத்தகைய கௌரவம் வழங்கப் பட்டுள்ளது.
அவர்கள்
நோபல் பரிசு பெற்ற சி.வி.இராமன் & சுப்ரமணிய சந்திரசேகர்;
கணிதவியலாளர் சீனிவாச இராமானுஜன்;
பிரபல இயற்பியலாளர் & வானியலாளர் டாக்டர். விக்ரம் சாராபாய்;
சிறந்த வானியலாளர் & சர்வதேச வானியல் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், வில்சன்-பப்பு விளைவின் இணை கண்டுபிடிப்பாளருமான மணாலி கல்லட் வைனு பப்பு
சிறு கோள்களுக்குப் பெயரிடச் செய்வதற்குக் கௌரவப் பெயரிடல் முறை மற்றும் வழக்கமான பெயரிடல் என இரண்டு பெயரிடும் முறைகள் பின்பற்றப் படுகின்றன.
கௌரவப் பெயரிடல் என்பது தாகூர், காந்தி, பண்டிட் ஜஸ்ராஜ், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கைலாஷ் சத்யார்த்தி போன்ற பிரபல நபர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கச் செய்வதைப் போன்றதாகும் .
வழக்கமான பெயரிடல் முறையானது, அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் அறிவியலாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளது.