அஸ்ஸாமின் நன்மை“ என்ற தலைப்பில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அண்மையில் கவுகாத்தியில் நடத்தப்பட்டது.
மாநிலத்தின் உற்பத்தித் துறையில் உள்ள வாய்ப்புகளையும், புவியிடவமைப்பு நன்மையையும் (geostrategic advantages) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக இந்த இரண்டு நாள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநில அரசோடு இணைந்து இந்தியாவின் தொழிற்சங்க அமைப்பான பிக்கி (FICCI – Federation of Indian Chambers of Commerce and Industry) இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.
ஆசியான் நாடுகளுக்கான இந்தியாவின் எக்ஸ்பிரஸ் வழித்தடமாக அஸ்ஸாம் மாநிலத்தை நிலைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.