TNPSC Thervupettagam

அஸ்ஸாமிற்கான இந்தியா – உலக வங்கி கடன் ஒப்பந்தம்

November 1 , 2017 2581 days 922 0
  • அஸ்ஸாம் வேளாண் வர்த்தகம் மற்றும் கிராமப்புற மாற்றம் எனும் திட்டத்திற்காக இந்திய அரசானது உலக வங்கியிடம் 200 டாலர்கள்  கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அஸ்ஸாமில் உள்ள 16 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் நடத்தும் தொழிற்நிறுவனங்கள் மீதும், உழவர் உற்பத்தியாளர் கழகத்தின் முடிவெடுப்புகளில் அத்தகு பெண் தொழிற் நிறுவனங்களின் பங்களிப்பின் மீதும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
  • இத்திட்டமானது வேளாண் வணிக முதலீடுகளை எளிதாக்குவதற்காக அஸ்ஸாம் மாநில அரசிற்கு ஆதரவளிக்கும்.
  • வேளாண் உற்பத்தியையும், சந்தை அணுகலையும் அதிகப்படுத்தும்.
  • மாநிலத்தில் அடிக்கடி நிகழும் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு நெகிழ்வுடைய பயிர்களை சிறிய பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.
  • இது அஸ்ஸாம் மாநிலத்தின் தொலைநோக்கான வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஊரக மாற்றத்தை முழுமைப்படுத்தும்.
IBRD (International Bank for Reconstruction and Development)- பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
  • பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியானது நடுத்தர வருமானமுடைய வளரும் நாடுகளுக்கு கடனளிக்கும் ஓர் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.
  • இது உலக வங்கி குழுமத்தினில் உள்ளடங்கியுள்ள ஐந்து நிறுவனங்களில் முதன்மையான முதல் நிறுவனமாகும்.
  • இரண்டாம் உலகப் போரால் பாழடைந்த ஐரோப்பிய நாடுகளின் புனரமைப்புக்கு நிதி வழங்கும் நோக்கோடு 1944-ஆம் ஆண்டு IBRD உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்