TNPSC Thervupettagam

அஸ்ஸாம் பிரச்சினை

May 21 , 2019 1889 days 580 0
  • அயல்நாட்டவர் தீர்ப்பாயத்தின் ஒரு தீர்ப்பான “ஒரு நபரை சட்டவிரோத வெளிநாட்டவர்” என்று அறிவிப்பது அனைவரையும் கட்டுப்படுத்தும் (binding) என்று இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • அஸ்ஸாமின் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து (National Register of Citizens - NRC) ஒரு நபரின் பெயரை நீக்கும் அல்லது சேர்க்கும் அஸ்ஸாம் அரசின் முடிவை விட இது அதிக அதிகார மிக்கவையாக விளங்குகின்றது.
  • அஸ்ஸாம் அரசின் இணையதளத்தின் படி ஏறத்தாழ 100 வெளிநாட்டவர் தீர்ப்பாயங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • பின்வரும் 2 சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
    • வெளிநாட்டவர்கள் தீர்ப்பாயச் சட்டம், 1941
    • வெளிநாட்டவர்கள் தீர்ப்பாய ஆணை, 1964
  • மேலும் இந்திய உச்ச நீதிமன்றம், பகுதி நீதிசார் நிறுவனமாக விளங்கும் NRC-ஐ விட வெளிநாட்டவர்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் அதிக அதிகாரம் மிக்கவையாக விளங்கும் என்றும் கூறியுள்ளது.
  • தேசிய குடிமக்கள் பதிவேடுகள் என்பது அஸ்ஸாமில் உள்ள இந்தியக் குடிமக்களின் பட்டியலாகும்.
  • வங்க தேசம் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் புலம்பெயரும் சட்டவிரோதக் குடியேற்றங்களைக் களைவதற்காக இது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்