TNPSC Thervupettagam

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Act - AFSPA) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

August 9 , 2017 2663 days 1052 0
  • அஸ்ஸாம் மாநிலத்தில் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Acts - AFSPA) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . அதற்கு ஏற்றவாறு , ஒட்டுமொத்த அஸ்ஸாம் மாநிலமும் ‘பாதிக்கப்பட்ட பகுதி’ (‘disturbed area’) என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மேகாலயாவின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளும் அஸ்ஸாமை ஒட்டியுள்ள பகுதிகளும் அருணாச்சல பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட பகுதியாக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது.
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது 1958 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
  • தற்சமயம் , ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கும் மாநிலங்கள் :
    • அருணாசலப் பிரதேசம்
    • அஸ்ஸாம்
    • மணிப்பூர்
    • மேகாலயா
    • மிசோரம்
    • நாகலாந்து
    • ஜம்மு காஷ்மீர்
  • திரிபுரா மாநிலத்தில் மே மாதம் 2015 இல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்