பாதுகாப்பு உபகரணங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதியை இலக்காகக் கொள்ளும் நோக்கில் ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகாஷ் ஏவுகணை என்பது நிலப்பரப்பில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் அழிக்கும் வகையில் 25 கி.மீ வரம்பினைக் கொண்ட குறுகிய தூரம் பாயும் ஒரு உள்நாட்டு ஏவுகணை ஆகும்.
இது ஒருங்கிணைந்த வழிகாட்டப் பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (1984) கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப் பட்டது.
இது 2014 ஆம் ஆண்டில் விமானப் படையிலும், 2015 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்திலும் சேர்க்கப் பட்டது.