ஒடிஸாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை பகுதியில் உள்நாட்டுத் தொழிற்நுட்பமுடைய ரேடியோ அதிர்வெண் தேடியை கொண்ட மீயொலி வேகம் உடைய (Supersonic) நிலத்திலிருந்து வான் இலக்கிற்கு ஏவக்கூடிய [Surface to Air] ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் [DRDO – Defence Research & Development Organisation] ஆனது ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் [Integrated Guided Missile Development Programme] உள்நாட்டுத் தொழிற்நுட்பத்துடன் இதனை உருவாக்கியுள்ளது.
இது உள்நாட்டு தொழிற்நுட்பமுடைய மற்றும் நடுத்தர இலக்கு வரம்புடைய [Medium Range] நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கிற்கு ஏவக்கூடிய ஏவுகணையாகும்.
18,000 மீட்டர் உயரத்தில், 30 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை இது அழிக்க வல்லது.
இந்த ஏவுகணையில் உள்ள ரோஹினி ரேடாரானது 120 கி.மீ. வரை வரம்பில் இருக்கும் விமானங்களை கண்டறியக் கூடியது.
இது போர் விமானங்கள், சீர்வேக ஏவுகணைகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணைகள் போன்றவற்றை இடைமறித்து அழிக்க வல்லது.
ஆகாஷ் ஏவுகணை தான் உள்நாட்டு தொழிற்நுட்பத்துடனான, ரேடார் அதிர்வெண் தேடி கொண்ட, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கிற்கு ஏவக்கூடிய (Surface to Air) பரிசோதிக்கப்பட்ட முதல் ஏவுகணை ஆகும்.
இந்த ஏவுகணை ஆனது குறைதூர வரம்புடைய நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவக்கூடிய ஏவுகணையாக (Short Range Surface to Air Missile) இந்திய தரைப்படை இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.