கேரள வனத் துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உயிரியல் ஆக்கிரப்புகளுக்கான முதன்மை மையம் ஆனது (NCBI) சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்ற தாவர இனத்தினை ஒழிப்பதற்கான ஒரு மேலாண்மைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது அந்த மாநிலத்திலுள்ள உயிரினங்களின் வாழ்விடத்திற்கு மிகவும் மோசமான அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு அயல்நாட்டு ஆக்கிரமிப்புத் தாவரமாகும்.
சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்பது அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு இலையுதிர் கால மரமாகும்.
இது குறுகிய காலத்தில் 15 முதல் 20 மீட்டர் வரை வளரக் கூடியதோடு, பூத்தல் என்ற நிகழ்விற்குப் பிறகு ஆயிரக்கணக்கான விதைகளை பரவச் செய்யக் கூடியது.
மரத்தின் தடிமனான இலையானது பிற பூர்வீக மர இனங்கள் மற்றும் புல் இனங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதனால் வனவிலங்குகளுக்கு குறிப்பாகத் தாவர உண்ணிகளுக்கு மிகப்பெரிய ஒரு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இது பூர்வீக இனங்களின் முளைத்தல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றினையும் மோசமாக பாதிக்கிறது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் 'குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் நிலையில் உள்ள இனம்' என வகைப்படுத்தப் பட்டுள்ளது.