மத்திய அரசு கால்நடைத் துறையில் ஆக்சிடோசின் (oxytocin) என்ற ஹார்மோனின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக அதன் இறக்குமதி மீது தடை விதித்துள்ளது. சமூக ஆர்வலர்கள், இந்த ஹார்மோன் மூலம் கறவை மிருகங்களின் வாழ்நாள் குறைவதோடு அவற்றில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு, ஹார்மோன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு தயாரிப்பையே உபயோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
2018, பிப்ரவரியில் மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனை மன்றம் (Drug Technical Advisory Board - DTAB) ஆக்சிடோசின் இறக்குமதிக்குத் தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு ஆக்சிடோசின் விற்பனை ஒரு சில பதிவு செய்யப்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த மருந்தின் எல்லா வகைகளின் மீதும் அதன் கண்காணிப்பு மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்தலைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக பார்கோடு Bar Code) முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
இந்த மருந்து பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக பால் பண்ணை உரிமையாளர்களாலும், காய்கறிகள் பெரிதாகவும் புத்துணர்வாகவும் தோற்றமளிப்பதற்காக விவசாயிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கறவை மிருகங்களிலும் விவசாயிகளாலும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டு இருக்கும் ஆக்சிடோசினின் வரைமுறையற்ற பயன்பாடு சரி செய்ய முடியாத ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்சிடோசின்
ஆக்சிடோசின் ஹார்மோன் கட்டித் தழுவத் தூண்டும் ஹார்மோன், அரவணைக்கத் தூண்டும் ரசாயனம், தார்மீக மூலக்கூறு மற்றும் பேரின்ப ஹார்மோன் எனவும் அறியப்படுகிறது. ஏனெனில் இவை இன்பத்தில் கொண்டிருக்கும் அதன் பங்கிற்காகவும், மறு உற்பத்தியில் பெண்களின் உயிரியல் மறு உற்பத்தி விவகாரங்களில் கொண்டிருக்கும் அதன் பங்கிற்காகவும் (female reproductive biological functions in reproduction) அவ்வாறு அறியப்படுகிறது.
இவை ஹார்மோன் ஆகவும் மூளையைத் தூண்டிவிடும் பாகமாகவும் (neurotransmitter) செயல்படுகிறது.