ஆக்ட்லாண்டிஸ் எனும் ஆக்டோபஸ்களால் கட்டமைக்கப்பட்ட ஆழ்கடல் நகரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இடங்களில் நிறம் மாற்றம் மற்றும் துரத்துதல் மூலமாக ஆக்டோபஸ்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன.
இது ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது நகரமாகும். ஆஸ்திரேலியாவின் ஜார்விஸ் விரிகுடாவில் இதே போன்ற ஆக்டோபஸ் நகரம் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.